குண்டும் குழியுமான சாலை

Update: 2023-04-02 06:32 GMT

சங்கரன்கோவில் அருகே அரியநாயகிபுரம் பஞ்சாயத்து பெரியசாமிபுரத்தில் பல ஆண்டுகளாக சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. சாலை முழுவதும் ஜல்லி கற்கள் பெயர்ந்து மண்சாலையாக மாறி விட்டது. ஆங்காங்கே ராட்ச பள்ளங்களாகவும் உள்ளதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை உடனே சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்