மானூர் தாலுகா வாகைக்குளம் பஞ்சாயத்து தெற்கு வாகைக்குளம் கிராமத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. ஆனாலும் பல ஆண்டுகளாகியும் திறப்பு விழா காணாததால் பயன்பாடற்று காட்சிப் பொருளாகவே உள்ளது. எனவே புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.