அருமனையில் இருந்து மஞ்சாலுமூடுக்கு செல்லும் சாலையில் தெற்றுவிளை உள்ளது. இந்த பகுதியில் மஞ்சாலுமூட்டுக்கு செல்லும் சாலை என வழிகாட்டி பலகை வைக்கப்பட்டு இருந்தது. தற்போது இதில் சிலர் சுவரொட்டிகளை ஒட்டி வழிகாட்டி பலகையை மறைத்துள்ளனர். இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சுவரொட்டிகளை அகற்றி சீரமைத்து பெயர் பலகையை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.