நெல்லை மாவட்டம் காவல்கிணறு இஸ்ரோ மையம் அருகில் மோர்மடம் எதிர்புறம் சாலையோரம் பராமரிப்பற்ற தரைமட்ட கிணறு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள், பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் போன்றவை கிணற்றுக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான தரைமட்ட கிணற்றுக்கு தடுப்புச்சுவர் அல்லது தடுப்பு கம்பிவேலி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.