ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் பேரூராட்சி நகரல் உள்ள ஆரம்ப மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இங்கு தற்போதுள்ள மருத்துவர்களே அனைத்து நோயாளிகளுக்கும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.இதனால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மருத்துவமனைக்கு கூடுதலாக மருத்துவர்களை நியமிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.