திண்டிவனம் தாலுகா சித்தணி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் பலத்த சேதமடைந்து, சிமெண்டு பூச்சுகள் ஆங்காங்கே விழுந்து காணப்படுகிறது. இதனால் ஏந்நேரமும் இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி கட்டிடம் உள்ளதால் குழந்தைகளை அனுப்ப பெற்றோர் அச்சப்படுகின்றனர். எனவே அசம்பாவிதம் நிகழும் முன் கட்டிடத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.