சங்கராபுரம் தாலுகா ராவுத்தநல்லூர் கிராமத்தில் உள்ள கிராம நிா்வாக அலுவலர் அலுவலகத்தில் பல மாதங்களாக கிராம நிர்வாக அலுவலர் இல்லை. இதனால் வடபொன்பரப்பி கிராம நிர்வாக அலுவலர் கூடுதல் பொறுப்பாக ராவுத்தநல்லூருக்கு அவ்வப்போது வந்து பணி செய்து வந்த நிலையில் அவரும் தற்போது வரவில்லை. இதனால் பொதுமக்கள் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?