திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா ஆலங்குடி ஊராட்சியில் ரேஷன் கடை உள்ளது. இந்த கடையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்கி வந்தனர். இந்த நிலையில் அந்த ரேஷன் கடை கட்டிடம் கடந்த சில மாதங்களாக சேதமடைந்து காணப்படுகிறது. தற்போது இந்த ரேசன் கடை வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. ஆனால் பழைய ரேஷன் கடை கட்டிடம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்து உள்ள ரேஷன் கடை கட்டிடத்தை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும்.