கம்பம் அருகே உள்ள நாராயண்தேவன்பட்டிக்கு சுருளிப்பட்டி முல்லைப்பெரியாற்றில் உறைகிணறு அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுருளிப்பட்டி-கம்பம் பிரிவு சாலை அருகே செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக செல்கிறது. எனவே குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.