விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.எடையார் ஏரியை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் ஏரியில் மழைக்காலங்களில் அதிக அளவில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருவதால், அப்பகுதியில் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது .எனவே ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.