விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் அருகே வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இப்பணியை செய்யும் நெடுஞ்சாலைத் துறையினர் அலட்சியப்போக்கு காரணமாக இதுவரை 2 அடி கூட பள்ளம் தோண்டப்படவில்லை. ஒரே நாளில் பள்ளம் தோண்டி பணிகளை முடிக்க வேண்டிய நிலையில், இன்னும் முடியாததோடு தற்போது அந்த பள்ளத்தில் சாக்கடை கலந்த கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.