அம்பை மெயின் பஜாரில் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் உள்ள நகராட்சி கட்டண கழிப்பிடத்தில் பெண்களுக்கென தனி கழிப்பறைகள் இல்லை. இதனால் அந்த கழிப்பறைகளை ஆண்கள் இல்லாத நேரத்தில் மட்டுமே பெண்கள் பயன்படுத்துகின்றனர். இதனால் பலரும் கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி கழிப்பறைகள் அமைத்து தருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.