கோவில்பட்டி புது ரோட்டில் உள்ள பழைய நகராட்சி அலுவலகம் அருகில் குடிநீர் குழாய் வால்வு தொட்டியில் கசிவுநீர் நிரம்பி சாலையில் வீணாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சாலை சேதமடைவதுடன் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும் அங்கு கழிவுநீரும் சாலையோரம் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.