கோவை வேடப்பட்டி பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்களை துரத்துகிறது. இதனால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து விடுகிறார்கள். மேலும் நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டபடி பெண்கள் மீது விழுகிறது. இதனால் அவர்கள் அச்சப்படுகிறார்கள். இதேபோல் குழந்தைகளை கடித்துவிடுகிறது.எனவே வேடப்பட்டி பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்வார்களா?