கோவை காருண்யா நகர் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் பஸ்சுக்காக பயணிகள் வெயிலில் காத்து நிற்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதன்காரணமாக அவர்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக மாணவ-மாணவிகள் மற்றும் முதியவர்கள் அவதிக்குள்ளாகுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகள் நிழற்குடை அமைக்க முன்வருவார்களா?