நெல்லை மாவட்டம் ஆற்றங்கரை பள்ளிவாசலில் இருந்து பெட்டைக்குளம் செல்லும் சாலையில் கல்விளை பஸ் நிறுத்தம் அருகில் உள்ள சிறு பாலத்தின் அடியில் செல்லும் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் அங்கு குளம் போன்று தண்ணீர் தேங்கியுள்ளது. எனவே குழாய் உடைப்பை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.