அரியலூர் மாவட்டம், செந்துறை பகுதியில் அதிகளவிலான குடியிருப்புகள் உள்ளன. இந்தநிலையில் இப்பகுதியில் ஏராளமான குரங்கள் சுற்றித்திரிகின்றன. இந்த குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து அங்குள்ள பொருட்களை தூக்கி கொண்டு செல்கிறது. மேலும் சாலையில் நடந்து செல்பவர்களை துரத்தி சென்று கடித்து அட்டகாசம் செய்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.