பாளையங்கோட்டை தியாகராஜநகரை அடுத்த மல்லிகா காலனியில் சாலை, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால் அங்கு குண்டும் குழியுமான சாலையில் செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் சாலையோரம் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே அங்கு அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய கேட்டு கொள்கிறேன்.