நெல்லை மேலப்பாளையம் அரசு ஆஸ்பத்திரி பழமைவாய்ந்த கட்டிடத்தில் இயங்குகிறது. இதன் நுழைவுவாயிலில் பெயர் பலகை அமைக்கப்படவில்லை. மேலும் குடிநீர் வசதியும் இல்லாததால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். போதிய மின்விளக்குகளும் இல்லாததால் இரவில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. எனவே அரசு ஆஸ்பத்திரியில் போதிய அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.