நாங்குநேரி யூனியன் இட்டமொழி அருகே அழகப்பபுரம் யாதவர் தெருவில் இருந்து கடயன்குளம் செல்லும் சாலையோரம் தரைமட்ட பொதுக்கிணறு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்கிறவர்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே ஆபத்தான தரைமட்ட கிணற்றைச் சுற்றிலும் தடுப்புச்சுவர் அமைத்து, இரும்பாலான மூடி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.