பண்ருட்டி நகராட்சி பஸ் நிலையத்தில் ஏராளமான பயணிகள் பஸ் ஏற வந்து செல்கின்றனர். இங்கு செயல்பட்டு வரும் கழிப்பறையில் ரூ.10-க்கும் மேல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து ஆய்வு செய்து அதிகாாிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.