நாய்கள் தொல்லை

Update: 2023-03-12 10:29 GMT

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுகா, மும்மூர்த்தி விநாயகர் கோவில் தெரு அதனை சுற்றியுள்ள பகுதியில் நாய்கள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை துரத்தி சென்று கடிக்கின்றன. வாகனங்களை விரட்டி செல்வதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இதன்காரணமாக அந்த வழியாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்