கோவை சாய்பாபாகாலனி கே.கே.புதூர் மணியவேலப்பர் வீதியில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. அவை அந்த வழியாக நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் துரத்தி சென்று கடிக்க முயல்கின்றன. இதனால் சாலையில் செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.