கோவில்பட்டி காந்தாரி அம்மன் கோவில் எதிரில் உள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியின் மின்மோட்டார் பழுதடைந்து பல மாதங்களாக காட்சிப்பொருளாக உள்ளதாக பாலமுருகன் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரமானது. இதையடுத்து மின்மோட்டார் பழுதை சரி செய்து சீராக குடிநீர் வினியோகம் செய்கின்றனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.