தென்காசி நகராட்சி 23-வது வார்டு முப்புடாதி அம்மன் கோவில் தெருவில் உள்ள ரேஷன் கடையின் முன்பு பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் காத்து கிடந்து உணவுப்பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதனால் முதியவர்கள், பெண்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே ரேஷன் கடையின் முன்பாக நிழற்கூரை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.