விழுப்புரம் அருகே பஞ்சமாதேவி கிராமத்தில் உள்ள குன்னந்தோப்பு குளம், புதர்மண்டி கிடக்கிறது. இக்குளத்துக்கு வரும் நீர்வரத்து வாய்க்காலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே புதர்மண்டி கிடக்கும் இந்த குளத்தை தூர்வாரி சீரமைப்பதோடு, நீர் வரத்து வாய்க்காலையும் தூர்வாரி சீரமைக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.