செஞ்சி செட்டிப்பாளையத்தில் இருந்து மேல் களவாய் செல்லும் சாலையில் சங்கராபரணிஆற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் கீழ் உள்ள சிமெண்டு குழாய்களில் குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக தண்ணீர் செல்வது தடைபட்டுள்ளதால், மழைக்காலங்களில் தரைப்பாலத்தின் மேல் தண்ணீர் செல்கிறது. எனவே தரைப்பாலத்தில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்வதுடன், பாலத்தை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.