அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்ட இடையன்விளை கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியின் அடிப்பகுதியான 4 சிமெண்டு தூண்களும் சேதமடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் காணப்படுகிறது. இதனால், நீர்தேக்க தொட்டி சரிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, நீர்தேக்க தொட்டியின் தூண்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ், சந்தையடி