சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா பாகல்பட்டி ஊராட்சி பூமிநாயக்கன்பட்டி கிராமத்தில் சுகாதார நிலையம் உள்ளது. ஏழு மாதத்திற்கு முன்பு பெயர் எழுதும் போது "சுகாதார" என்பதற்கு பதிலாக "சுகதார" என்று எழுதப்பட்டுள்ளது. இதுகுறித்து தெரிவித்தும் இதுவரை மாற்றி எழுதப்படவில்லை. எனவே அதிகாரிகள் எழுத்துப்பிழையை உடனடியாக திருத்தி எழுத வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-அன்பரசு, ஓமலூர், சேலம்.