தென்காசி மாவட்டம் கல்யாணிபுரத்தில் இருந்து ஆழ்வார்குறிச்சி செல்லும் அரசு டவுன் பஸ்சில் தினமும் காலையில் ஏராளமான மாணவ- மாணவிகள் ஆபத்தான முறையில் படிக்கட்டுகளில் தொங்கியவாறு பயணிக்கின்றனர். எனவே அந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.