வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-07-20 13:35 GMT

தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை, திரவியநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தென்காசி மற்றும் கேரளாவுக்கு கட்டுமான பணிகளுக்காக லாரிகளில் மணல் ஏற்றிச் செல்லப்படுகிறது. ஆனால் அவற்றை தார்ப்பாய் கொண்டு மூடாமல் செல்வதால், லாரிகளின் பின்னால் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கிறது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்