திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், எ.பாதர்பேட்டை ஊராட்சி வெங்கட்டம்மாள் சமுத்திரம் கிராமத்தில் காலனியில் உள்ள 3 வீதிகளுக்கு கான்கிரீட் சாலை மற்றும் கழிவுநீர் வடிகால் அமைக்க ஒப்பந்தம் போடப்பட்டது. ஒப்பந்தம் போடப்பட்டு, 2 ஆண்டுகள் ஆகியும் பணிகள் முடிக்கப்படாமல் பாதியில் நிற்கிறது. ஒப்பந்தக்காரர்களிடம் பொதுமக்கள் கேள்வி கேட்டால் முறையான பதிலில்லை. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.