மரக்காணம் தாலுகா சிறுவாடி கிராமத்தில் ஏரிநீர் செல்லும் ஓடை ஆக்கிரமிப்பு காரணமாக சுருங்கிப்போய் விட்டது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல முடியாமல் விளை நிலங்களில் புகுந்து தேங்கி நிற்பதால் பயிர்கள் சேதமடைகின்றன. இதனால் விவசாயிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.