தென்காசி அருகே சுந்தரபாண்டியபுரத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. அந்த வழியாக செல்லும் குழந்தைகள், பெண்கள், முதியவர்களை தெருநாய்கள் விரட்டி கடிக்கின்றன. எனவே பொதுமக்களுக்கு இடையூறான தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.