நடவடிக்கை தேவை

Update: 2023-02-26 07:43 GMT

தோவாளை வட்டம் சகாயநகர் ஊராட்சிக்கு உட்பட்ட விசுவாசபுரத்தில் அரசு தொடக்கப்பள்ளி 80 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கழிவறை வசதி இல்லாமல் இருந்தது. இதையடுத்து பள்ளி மேலாண்மை குழு சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடக்கப்பட்டது. ஆனால், பணிகள் தொடங்கிய நில நாட்களிலேயே கிடப்பில் போட்டப்பட்டது. இதனால், மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, கிடப்பில் போடப்பட்ட கழிவறை கட்டிட பணியை விரைந்து முடிந்து மாணவர்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-த.விஜேஷ், விசுவாசபுரம்.

மேலும் செய்திகள்