சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் சில மதுக்கடைகளுடன் கூடிய பார்கள் செயல்பட்டு வருகிறது. அதில் சில பார்களில் காலை 10 மணி முதலே சட்டவிரோதமாக மது விற்பனையை தொடங்கி விடுகின்றனர். இதனால் காலையிலேயே மது பிரியர்கள் மது குடித்து விட்டு ஆங்காங்கே படுத்து கிடக்கின்றனர். இதனால் பெண்களும், மாணவ, மாணவிகளும் அச்சத்துடன் உள்ளனர். இதுகுறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?