நாமக்கல்லில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளது. இங்கு வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டங்களுக்கும், பிற நாட்களில் ஏராளமான பொதுமக்கள் மனு அளிக்க வந்து செல்கின்றனர். அவ்வாறு கலெக்டர் அலுவலகம் வந்து செல்லும் பொது மக்களுக்கு இயற்கை உபாதைகளை கழிக்க நுழைவுவாயில் முன்பு சுகாதார வளாகம் இல்லாததால் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே கலெக்டர் அலுவலகத்தில் நுழைவுவாயிலில் சுகாதார வளாகம் அமைக்கப்படுமா?