பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சி ஈச்சம்பட்டி 8-வது வார்டு அம்பேத்கர் காலனியில் சுமார் 70 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு போட்டப்பட்ட சாலை தற்போது குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் உடைந்து தண்ணீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. மேலும் இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள் சரியாக எரிவது இல்லை. குடிப்பதற்கு போதிய தண்ணீரும் இப்பகுதி மக்களுக்கு கிடைப்பது இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.