கரூர் மாவட்டம் நொய்யலில் இருந்து பரமத்தி செல்லும் சாலையில் உள்ள மேட்டுக்கடை, வளையாபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இந்த தெருநாய்கள் சாலையில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களை கடிக்க துரத்துகிறது. இதனால் அவர்கள் பயத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் பள்ளி மாணவிகளை கடிக்க பாய்வதால் அவர்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். இப்பகுதியில் உள்ள கோழிகளையும் கடித்து குதறுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.