நாக்கோவிலில் இருந்து சுசீந்திரம் செல்லும் சாலையில் கரியமாணிக்கபுரம் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தின் அருகில் மன்னர் காலத்தில் பயணம் செய்யும் பாதசாரிகள் ஓய்வு எடுப்பதற்காக கட்டப்பட்ட கல்மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபம் பராமரிப்பு இன்றி பாழடைந்து காணப்படுகிறது. எனவே, பாழடைந்து காணப்படும் மன்னர் கால கல்மண்டபத்தை சீரமைத்து வேறு பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராமநாதன், சுசீந்திரம்