கோமுகி அணையை தூர்வாருவது அவசியம்

Update: 2022-07-20 11:28 GMT
கச்சிராயப்பாளையம் அருகே கல்வராயன்மலை அடிவாரத்தில் 46 அடி கொள்ளளவு கொண்ட கோமுகி அணை அமைந்துள்ளது. இந்த அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் 11 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கடந்த சில ஆண்டுகளாக அணையை சரிவர தூர்வாராததால் அணை மண்ணால் தூர்ந்து கிடக்கிறது.இதனால் போதிய தண்ணீரை சேமிக்க முடியவில்லை. இதன் காரணமாக போதிய தண்ணீர் இன்றி விவசாயிகள் பரிதவித்து வருகிறார்கள். எனவே விவசாயிகள் நலன் கருதி கோமுகி அணையை தூர்வாருவது மிகவும் அவசியமாகும்.

மேலும் செய்திகள்