பயன்பாடு இல்லாத சந்தை

Update: 2023-02-19 17:17 GMT

சேலம் மாவட்டம் சூரமங்கலம் மண்டல அலுவலகத்திற்கு அருகே பழைய சூரமங்கலம் பகுதியில் வியாழன்தோறும் காய்கறி வாரச்சந்தை செயல்பட்டு வந்தது. தற்போது சந்தை சாலையையொட்டி கடைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதனால் அந்த வழியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வியாழன் சந்தை செயல்படுவதற்காக அருகிலேயே 25-க்கும் மேற்பட்ட கடைகள் வைத்து காய்கறிகள் விற்பனை செய்யும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் கட்டிடம் அமைத்துள்ளது. ஆனாலும் இந்த கட்டிடத்தில் வியாழன் சந்தை நடைபெறுவதில்லை. எனவே சந்தைக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில் காய்கறி கடைகள் வைத்து விற்பனை செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ஜோனத்தான், சூரமங்கலம், சேலம்.

மேலும் செய்திகள்