விக்கிரவாண்டி தாலுகா செம்மேடு கிராமத்தில் இரண்டு பஸ் நிறுத்தம் உள்ளது. ஆனால் இதில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் வெயிலிலும், மழையிலும் நின்று பஸ் ஏறிச்செல்கின்றனர். இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணியாளர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே பயணிகள் நலன் கருதி செம்மேடு கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை அமைக்க வேண்டும்.