சுகாதார நிலையம் பயன்பாட்டிற்கு வருமா?

Update: 2022-07-20 11:19 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் வண்ணாங்குண்டு ஊராட்சியில் அமைந்திருக்கும் துணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த சில மாதங்களாக  பராமரிப்பு பணி நடைபெற்றது. இந்தநிலையில் பணி முழுமை அடைந்தும் மக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் சுகாதார நிலையம் வரவில்லை. இதனால் சுற்றுவட்டார மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். நோயாளிகள் சிகிச்சைக்காக சுமார் 5 கி.மீ. வரை செல்கின்றனர்.எனவே  மக்களின் நலன் கருதி மீண்டும் துணை சுகாதார நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.

அர்சாத் அலி, வண்ணாங்குண்டு

மேலும் செய்திகள்