பெரம்பலூர் நகரப்பகுதியில் மாலை மற்றும் இரவு நேரத்தில் ஏராளமான கொசுக்கள் பொதுமக்களை கடித்து வருகிறது. இதனால் இப்பகுதியில் மர்ம காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மாலை நேரத்தில் பெரம்பலூர் நகர பகுதியில் கொசு ஒழிப்பு மருந்து அடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.