விபத்து அபாயம்

Update: 2023-02-19 11:45 GMT

திருச்சி மாவட்டம், முசிறியில் இருந்து தும்பலம் வழியாக தா.பேட்டை செல்லும் சாலையின் இருபுறமும் சுமார் 100-க்கும் மேற்பட்ட புளிய மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் தற்போது புளிகள் அதிகமாக உள்ளதால் சாலை வழியே இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் மரத்தின் மீது கல் எரிந்து அதிலிருந்து விழும் புளிகளை பொறுக்கி எடுத்து செல்கின்றனர். சிலர் சாலையின் நடுவிலேயே நின்று மரத்தில் இருந்து விழும்ய புளிகளை எடுத்து செல்லும்போது எதிர்பாராத விதமாக பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்துக்கள் ஏற்பட நேரிடும். எனவே விபத்து ஏற்படும் முன்பு இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்