தென்காசி நகராட்சி வளாகத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பணிநிமித்தம் வந்து செல்கிறார்கள். கொடுக்கப்பட்ட மனு சம்பந்தமாக அதிகாரிகளை பாா்ப்பதற்கும், புதியதாக மனு கொடுப்பதற்கும் காத்து நிற்கும் பொதுமக்கள் அமருவதற்கும் மற்றும் ஆண்கள் பெண்களுக்கு தனித்தனியாக கழிப்பிட வசதியும் ஏற்படுத்தி கொடுத்தால் பொதுமக்கள் பயனடைவார்கள். நகராட்சி நிர்வாகம் ஆவன செய்ய கேட்டுக்கொள்கிறேன்.