சங்கராபுரம் அருகே திருவண்ணாமலை ரோடு பெரியார் மற்றும் அம்பேத்கர் சிலைக்கு அருகில் சாய்ந்த நிலையில் பழமையான புளியமரம் உள்ளது. இந்த மரம் பலத்த சூறைக்காற்று வீசினால், விழும் நிலையில் உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே சாய்ந்த நிலையில் இருக்கும் மரத்தை வெட்டி அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.