கண்டுகொள்ளப்படாத ஆக்கிரமிப்பு

Update: 2023-02-15 12:37 GMT
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், அகரம்சீகூர் கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சொந்தமான விளையாட்டு மைதானத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்றிட 3 முறை தேதி அறிவிக்கப்பட்டும் இதுவரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதனால் மாணவ-மாணவிகள், இளைஞர்கள் பல்வேறு இன்னல்களுக்கும், சிரமத்திற்கும் ஆளாகி வருகின்றனர். இவர்களின் நலன் கருதி இனியும் கால தாமதம் செய்யாமல் பள்ளி விளையாட்டு மைதானம் ஆக்கிரமிப்புகளை அகற்றிட ஊரக வளர்ச்சிதுறையும், வருவாய்துறையும் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்