திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்துள்ள எரகுடி ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கான குப்பை சேகரிக்கும் வண்டிகள் பழுதான நிலையில் வெகுநாட்களாக கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஊராட்சி குப்பைகளை சேகரிப்பதில் தூய்மைப்பணியாளர்கள் சிரமப்படுகின்றனர். அங்கன்வாடி கட்டிடம் அருகே குப்பை வண்டிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் சுகாதாரக்கேடும், சுற்றுச் சூழலும் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கின்றன. ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.